அமமுகவிலிருந்து 1500 குடும்பங்கள் அதிமுகவில் இணைவு – “52 ஆண்டுகளாக அதிமுக மீண்டும் மீண்டும் ஒன்று சேரும் இயக்கம்” – முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 November 2025

அமமுகவிலிருந்து 1500 குடும்பங்கள் அதிமுகவில் இணைவு – “52 ஆண்டுகளாக அதிமுக மீண்டும் மீண்டும் ஒன்று சேரும் இயக்கம்” – முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ்.


மன்னார்குடி | நவம்பர் 18

திருவாரூர் அமமுக ஒன்றிய செயலாளர் குரும்பேரி மணிகண்டன் (திருமாறன்) தலைமையில், அவரின் ஆதரவாளர்களான ஒன்றிய கழக அவைத்தலைவர் ராஜமாணிக்கம், மகளிரணி துணை செயலாளர் சாந்தி உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அமமுக உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.


இணைப்பு நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கூறியதாவது: “புரட்சித்தலைவர் எம்ஜி.ஆர். கையில் பச்சை குத்திக் கொள்ள சொன்ன காலம் முதல் அதிமுக ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கம். அதில் சிறிய விரிசல்கள், பிளவுகள் இருப்பது இயல்பே. ஆனால் 1972 முதல் 52 ஆண்டுகளாக அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டாலும் மீண்டும் ஒன்று சேரும் மரபு தொடர்ந்து வருகிறது.


அந்த வகையில், அமமுகவில் இருந்தவர்கள் இன்று சரியான தருணத்தில் மீண்டும் இணைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
2026 ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கப் போகிறது” என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad